ஹொரணை இறப்பர் தொழிற்சாலை உரிமையாளருக்கு விளக்கமறியல்

ஹொரணை இறப்பர் தொழிற்சாலை உரிமையாளருக்கு விளக்கமறியல்

ஹொரணை இறப்பர் தொழிற்சாலை உரிமையாளருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

27 Apr, 2018 | 5:11 pm

Colombo (News 1st) 

ஹொரணை – பெல்லபிட்டிய இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தனது சட்டத்தரணியூடாக ஹொரணை நீதிமன்றத்தில் அவர் ஆஜரானதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த தொழிற்சாலையின் முகாமையாளரும், சிரேஷ்ட இரசாயன கட்டுப்பாட்டாளரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பெல்லப்பிட்டிய பகுதியிலுள்ள இறப்பர் தொழிற்சாலையில் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற அனர்த்தத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன், 15 பேர் வரை சுகயீனமுற்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்