ஹெரோயினுடன் கைதானவருக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயினுடன் கைதானவருக்கு ஆயுள் தண்டனை

by Bella Dalima 27-04-2018 | 5:19 PM
Colombo (News 1st)  5 கிராம் 7 மில்லி கிராம் ஹெரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி கல்கிசை பகுதியில் சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.