ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர கோரிக்கை

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர கோரிக்கை

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

27 Apr, 2018 | 3:33 pm

Colombo (News 1st) 

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர்வதற்கு எழுத்து மூலம் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயகவிடம் அவர்கள் இந்த கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த கோரிக்கையை பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அதற்கமைய, எதிர்வரும் 8 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது குறித்த 16 பேர் அடங்கிய குழுவினர் எதிர்க்கட்சியில் அமரவுள்ளதாக அவர் கூறினார்.

அன்றைய தினம் எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகளை ஏற்று செயற்படுவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாகவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்