ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு

ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு

ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

27 Apr, 2018 | 10:38 pm

சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கில், நடிகர் ரஜினிகாந்த் ஜூன் 6 ஆம் திகதி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த சினிமா பைனான்சியர் முகுந்சந்த் போத்ரா, திரைப்பட இயக்குனரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக காசோலை மோசடி வழக்குத் தொடர்ந்தார்.

அதில், நடிகர் ரஜினிகாந்தின் ஒப்புதலுடன் தான் கஸ்தூரி ராஜாவுக்கு கடன் கொடுத்ததாகக் கூறியிருந்தார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த், தன்னிடம் பணம் பறிக்க முகுந்சந்த் போத்ரா முயற்சிக்கிறார் என்று கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக அவதூறு வழக்கை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றில் போத்ரா தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூன் 6 ஆம் திகதி ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்