by Bella Dalima 27-04-2018 | 3:43 PM
Colombo (News 1st)
உலக வங்கியூடாக இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைத்துள்ளது.
நாட்டின் கல்வி செயற்பாடுகளுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பொருளாதார அபிவிருத்திக்கு சாதகமாகும் வகையில், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களை நவீனமயப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.