ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் தமிழக நிறுவனம்

இலங்கைக்கு ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் தமிழக நிறுவனம்

by Bella Dalima 27-04-2018 | 4:12 PM
Colombo (News 1st)  தமிழகத்தில் பயணிகளுக்கான ரயில் பெட்டிகளை தயாரிக்கும் நிறுவனம் இலங்கைக்கான ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தினால் இலங்கைக்கான ரயில் பயணிகளுக்கான 70 பெட்டிகள் தயாரிக்கப்படவுள்ளன. குறித்த நிறுவனம் இலங்கைக்காக ரயில் பெட்டிகளைத் தயாரிப்பது இதுவே முதற்தடவையாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. முதற்கட்டமாக 16 பெட்டிகளை விநியோகிப்பதற்கு தமிழக நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இலங்கை முன்வைத்த கேள்வி மனுக்களுக்கு அமைவாக, இந்த தயாரிப்புக்களை தமிழக நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.