தேசிய வெசாக் வாரம் ஆரம்பம்

தேசிய வெசாக் வாரம் ஆரம்பம்

by Bella Dalima 26-04-2018 | 3:22 PM
Colombo (News 1st)  தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பமானது. ''ஆள் மனதின் தூய்மை நிலைபேறான மன அமைதிக்கு வித்திடும்'' என்பது இம்முறை வெசாக் பண்டிகைக்கான தொனிப்பொருளாகும். இன்று முதல் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை தேசிய வெசாக் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இம்முறை அரச வெசாக் பண்டிகை எதிர்வரும் 28 ஆம் திகதி குருநாகல் பிங்கிரிய தேவகிரி ரஜமகா விகாரையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. வெசாக் பண்டிகை தொடர்பில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு நகரில் மாத்திரம் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். இதேவேளை, வெசாக் பண்டிகையை முன்னிட்டு சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. வெசாக் காலப்பகுதியில் வெசாக் அலங்காரங்கள் மற்றும் விற்பனையின் போது இடம்பெறக்கூடிய மோசடிகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.