கிழக்கு மாகாண வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

கிழக்கு மாகாண வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

கிழக்கு மாகாண வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2018 | 4:02 pm

Colombo (News 1st) 

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியர்களும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் சனீத் பேதுருஆராச்சி தெரிவித்தார்.

இந்த விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவை பயனளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

மாகாணத்திலுள்ள சில வைத்தியசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களின் பெயர் பட்டியலை அனுபியுள்ள போதிலும், இதுவரை அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை என சனீத் பேதுருஆராச்சி கூறினார்.

பிரதேச அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாகவே வெற்றிடங்களை நிரப்ப முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாகவே அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாகவும் சனீத் பேதுருஆராச்சி சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, நாளை (25) காலை 8 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்