ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து ஜோசப் மைக்கல் பெரேரா இராஜினாமா

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து ஜோசப் மைக்கல் பெரேரா இராஜினாமா

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து ஜோசப் மைக்கல் பெரேரா இராஜினாமா

எழுத்தாளர் Bella Dalima

26 Apr, 2018 | 5:04 pm

Colombo (News 1st) 

முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான ஜோசப் மைக்கல் பெரேரா ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

இன்றைய மத்திய செயற்குழுக்கூட்டத்தின் போது அவர் உரையாற்றியதன் பின்னர் இராஜினாமா செய்ததாக இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முழுமையான அதிகாரமுடைய அரசியல் குழுவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட நிர்வாகக் குழுவின் புதிய உறுப்பினர் தெரிவுக்கு மத்திய செயற்குழு இன்று அனுமதி வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்