by Bella Dalima 25-04-2018 | 9:39 PM
Colombo (News 1st)
தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் 20 வயதிற்குட்பட்ட மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் சந்திரசேகரன் சங்கவி வெண்கலப் பதக்கம் வென்றார்.
போட்டியில் அவர் 33.73 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார்.
இதேவேளை, 16 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பம்பலப்பிட்டி சென். பீட்டர்ஸ் கல்லூரியின் ருமேஷ் தரங்க போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
போட்டியில் அவர் 65.26 மீற்றர் தூரத்திற்கு எறிந்து ஆற்றலை வெளிப்படுத்தினார்.
சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இறுதி நாள் நாளை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.