வெசாக் வலயத்தில் சரியுத், முகலனின் புனித சின்னங்கள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன

வெசாக் வலயத்தில் சரியுத், முகலனின் புனித சின்னங்கள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன

வெசாக் வலயத்தில் சரியுத், முகலனின் புனித சின்னங்கள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

25 Apr, 2018 | 4:08 pm

Colombo (News 1st) 

MTV/MBC, யூனியன் அஷூரன்ஸ் (Union Assurance) வெசாக் வலயத்தில் இம்முறையும் புத்த பகவானின் பிரதம சீடர்களான சரியுத் மற்றும் முகலன் ஆகிய தேரர்களின் புனித சின்னங்கள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.

இந்த புனித சின்னங்கள் இன்று மொரவக்க பானகல விகாரைக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டன.

மருதானை மகாபோதி அக்ராஷ்கரவக்க மகா விகாரையில் வைக்கப்பட்டிருந்த புத்த பகவானின் பிரதம சீடர்களான சரியுத் மற்றும் முகலன் ஆகிய தேரர்களின் புனித சின்னங்கள் சமய அனுஷ்டானங்களுக்காக இன்று பானகல விகாரைக்கு எடுத்துச்செல்லப்பட்டன.

இன்றும் நாளையும் புனித சின்னங்களை தரிசிக்கக்கூடிய வாய்ப்பு குறித்த பிரதேச வாசிகளுக்குக் கிட்டவுள்ளது.

அதன் பின்னர் புனித சின்னங்கள் MTV/MBC யூனியன் அஷூரன்ஸ் வெசாக் வலயத்திற்கு எடுத்துவரப்படவுள்ளன.

MTV/MBC யூனியன் அஷூரன்ஸ் வெசாக் வலயம் இம்மாதம் 29 ஆம் திகதி முதல் மே மாதம் 1 ஆம் திகதி வரை கொழும்பு 2, பிரேப்ரூக் பிளேஸில் அமைந்துள்ள MTV/MBC தலைமையக வளாகத்தில் மக்களுக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்