ஶ்ரீ.சு.க எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானம்

by Staff Writer 25-04-2018 | 8:39 AM
COLOMBO (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நேற்று நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் நேற்றிரவு 8 மணியளவில் கூடியது. 10.30 வரை இடம்பெற்ற கூட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தி, அரசாங்கத்தை வெற்றிகரமான முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இராஜங்க அமைச்சர் ஷ்ரியாணி விஜேவிக்ரம தெரிவித்தார். அத்துடன் மே தினக்கூட்டத்தை எதிர்வரும் 7 ஆம் திகதி மட்டக்களப்பில் நடத்துவது தொர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக முன்னாள் பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.