பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்
by Bella Dalima 25-04-2018 | 9:02 PM
Colombo (News 1st)
வடக்கு, கிழக்கைச் சேர்ந்த சுமார் 200-ற்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு முன்பாக நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பு , காணி உரிமைகளுக்கான மக்கள் இயக்கம், பிரஜா அபிலாசை வலையமைப்பு, காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு இயக்கம் என்பன ஏற்பாடு செய்திருந்தன.
மக்களின் காணிகளை மீள பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அதிகாரிகளை வலியுறுத்தினர்.