தென்னிலங்கையிலிருந்து ஆட்களைக்கொண்டுவரவேண்டிய நிலை

தென்னிலங்கையில் இருந்து வட மாகாணத்திற்கு ஆட்களைக் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது: க. சர்வேஸ்வரன்

by Bella Dalima 25-04-2018 | 8:48 PM
Colombo (News 1st)  நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் அச்சுவேலி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற புதுவருட பொங்கல் விழாவில் கலந்துகொண்டிருந்த வட மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன், வட மாகாண கல்வி நிலை தொடர்பில் கருத்து வௌியிட்டார். 60 ஆம், 70 ஆம் ஆண்டுகளில் வட மாகாணத்தில் இருந்த கல்வியலாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், தற்போது அத்தொகை 30 வீதத்திலிருந்து 4 வீதமாகக் குறைவடைந்துள்ளதாக க. சர்வேஸ்வரன் தெரிவித்தார். வடக்கில் இருந்து தென்னிலங்கை நிர்வாகத்திற்கு ஆளணி அனுப்பிய காலம் மாறி தற்போது தென்னிலங்கையில் இருந்து வட மாகாணத்திற்கு ஆட்களைக் கொண்டு வந்து நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.