கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் சாதனை வருமானம்

சாதனை வருமானத்தை பதிவு செய்துள்ள இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம்

by Bella Dalima 25-04-2018 | 3:38 PM
Colombo (News 1st) வரலாற்றில் முதற்தடவையாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் சிங்கள தமிழ் புதுவருட காலத்தில் சாதனை வருமானத்தை பதிவு செய்துள்ளது. பண்டிகைக் காலத்தில் 68 வீத மீன் விற்பனை இடம்பெற்றுள்ளதுடன், இதனால் கிடைக்கப்பெற்றுள்ள வருமானம் 74 வீதத்தால் அதிகரித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த மாதத்தின் 05 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 7,22,76 ,871 ரூபா வருமானம் ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.