ஐ.தே.க-வில் மாற்றத்தை எதிர்பார்த்தோம்

ஐக்கிய தேசியக் கட்சியில் மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை மாற்றத்தை எதிர்பார்த்தோம்: ஆனந்த அளுத்கமகே

by Bella Dalima 25-04-2018 | 10:40 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியில் மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை தாம் மாற்றத்தை எதிர்பார்த்ததாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே நியூஸ்லைன் நிகழ்ச்சியின் போது தெரிவித்தார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியில் பாரிய மறுசீரமைப்பு அவசியம் என தாம் நம்புவதாகவும் மக்களை ஏமாற்றுவதற்காக மறுசீரமைப்பை மேற்கொண்டோம் என்று கூறுவதில் பலன் இல்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே சுட்டிக்காட்டினார். நியூஸ்லைன் தொகுப்பினை காணொளியில் காண்க...