இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாதளவு வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாதளவு வீழ்ச்சி

by Bella Dalima 25-04-2018 | 8:23 PM
Colombo (News 1st)  அமெரிக்க டொலர் ஒன்றுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாதளவு வீழ்ச்சி கண்டுள்ளது. இதற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்று 159 ரூபாவிற்கும் அதிகத் தொகையில் விற்பனை செய்யப்படவுள்ளது. நேற்றைய தினம் (24) டொலர் ஒன்றின் பெறுமதி 158.17 ரூபாவாகக் காணப்பட்டதுடன், இன்றைய தினம் டொலர் ஒன்றின் பெறுமதி 159.04 ரூபாவாக அதிகரித்துள்ளது. தற்போதைய அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறிய 2015 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி டொலர் ஒன்றின் பெறுமதி 131 ரூபா 25 சதமாகக் காணப்பட்டது. கடந்த மூன்று வருடங்களில் ரூாபாவின் பெறுமதி 20 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது.