களனியில் 3 கிலோ மீற்றர் தூரத்திற்கு தொங்கு பாலம்

கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க களனியில் 3 கிலோ மீற்றர் தூரத்திற்கு தொங்கு பாலம்

by Bella Dalima 24-04-2018 | 9:20 PM
Colombo (News 1st)  கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலவும் வாகன நெரிசலை குறைப்பதற்கு களனியில் பாலம் ஒன்று அமைக்கப்படுகின்றது. களனி பாலத்திற்கு அருகில் உள்வரும் மற்றும் வௌியேறும் வாகனங்களினால் தினமும் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 3 கிலோ மீற்றர் தூரத்திற்கு தொங்கு பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது. ஜப்பானினால் வழங்கப்பட்ட 35,020 மில்லியன் ரூபா கடன் உதவியுடன் இந்த பாலம் நிர்மாணிக்கப்படுகின்றது. இந்த திட்டத்திற்காக 12.9 ஹெக்டயர் நிலப்பரப்பை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளதுடன், 2020 ஆம் ஆண்டளவில் நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. கண்டி - கொழும்பு , நீர் கொழும்பு - கொழும்பு வீதியில் உள்வரும் வாகனங்களும் கட்டுநாயக்க அதிவேக வீதியில் வரும் வாகனங்களும் தற்போது நிர்மாணிக்கப்படும் புதிய பாலத்தின் ஊடாகப் பயணிக்கும் என புதிய களனி பால செயற்றிட்டத்தின் பணிப்பாளர் தர்சிகா ஜயசேகர குறிப்பிட்டார்.