நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது ஒப்பனையாளருக்கு (Makeup Man) அவரின் பிறந்தநாளுக்கு கார் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார்.
ஜாக்குலின் பெர்னாண்டஸின் ஒப்பனையாளரான கேரளாவைச் சேர்ந்த ஷான் முட்டத்தில், இந்தி திரையுலகில் பிரபலமானவர்.
இதேவேளை, ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கு நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் அதிகரித்து வருகிறது.
இதற்கு காரணமான தனது ஒப்பனையாளர் மீது ஜாக்குலின் தனி அக்கறை வைத்திருந்தார்.
இந்த நிலையில், தனது ஒப்பனையாளருக்கு அவரே எதிர்பார்க்காத பரிசொன்றைக்கொடுத்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
அண்மையில் ஷானின் பிறந்த நாள் வந்தது. அன்றைய தினம், ஒரு அடுக்கு மாடி வீட்டில் குடியிருக்கும் ஷானை, கீழே வரும்படி ஜாக்குலின் பெர்னாண்டஸ் அழைத்துள்ளார்.
அவர் கீழே வந்ததும், ‘வாழ்த்துக்கள்’ என்று கூறி ஒரு கார் சாவியை ஷானிடம் கொடுத்துள்ளார்.
அருகில் ஒரு SUV கம்பஸ் வகையைச் சேர்ந்த ஜீப் கார் நின்று கொண்டிருந்தது.
‘இது உங்களுக்குத்தான்’ என்று ஜாக்குலின் சொன்னதும் அவருடைய ஒப்பனையாளர் ஷான் அசந்து போனார்.
இதுவரை வந்த எனது பிறந்த நாளில் இது மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது, என அவர் உணர்ச்சி பொங்கக் கூறியுள்ளார்.
