அமைச்சரவை இன்று கூடியது

அமைச்சரவை கூடியது: அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளை கலந்துரையாடியதாக தகவல்

by Bella Dalima 24-04-2018 | 8:03 PM
Colombo (News 1st)  அமைச்சரவை இன்று கூடியது. மக்களின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக கூட்டம் நிறைவு பெற்று வௌியேறிய போது அமைச்சர்கள் கூறினர். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்ததாவது,
அமைச்சரவை மறுசீரமைப்பு, நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை, தேர்தல், 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு, காணிகளைப் பகிர்ந்தளித்தல், வீடுகள் நிர்மாணம், மின்சார விநியோகம், குடிநீர் விநியோகம், விவசாயிகளைப் பாதுகாத்தல், மீனவர்கள், நடுத்தர வர்க்கத்தவர்கள் அரச உத்தியோகத்தர்களைப் பாதுகாத்தல் போன்ற முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டாலும் இல்லாவிட்டாலும் நல்லாட்சி அரசாங்கம் முன்னோக்கிப் பயணிக்கும். 2020 ஆம் ஆண்டளவில் 2500 ''உதா கம்மான'' திட்டங்களுக்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியது. வீடுகளை நிர்மாணிப்பதற்கும், காணிகளை ஒதுக்குவதற்கும் நேரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர். இதன்போது, தற்போதைய நிலைமை, சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டார்.