by Staff Writer 24-04-2018 | 9:23 AM
COLOMBO (News 1st) ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இரவு எட்டு மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது
கடந்த வாரம் அரசாங்கத்திலிருந்து வௌியேறிய கட்சியின் உறுப்பினர்கள் 16 பேரும் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.