புத்தளத்தில் சில பகுதிகளில் கடலரிப்பின் வீதம் அதிகரிப்பு

புத்தளத்தில் சில பகுதிகளில் கடலரிப்பின் வீதம் அதிகரிப்பு

புத்தளத்தில் சில பகுதிகளில் கடலரிப்பின் வீதம் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2018 | 10:32 am

COLOMBO (News1 st) புத்தளத்தில் சில பகுதிகளில் கடலரிப்பின் வீதம் அதிகரிப்புநிலவும் சீரற்ற வானிலையால் புத்தளத்தில் சில பகுதிகளில் கடலரிப்பின் வீதம் அதிகரித்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட உடப்பு ஆண்டிமுனை செல்வபுரம் மற்றும் பாரிபாடு ஆகிய கடற்கரையோரம் நாளுக்கு நாள் கடலரிப்புக்குள்ளாகி வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடலரிப்பு காரணமாக தாங்கள் அமைத்து வைத்துள்ள மீன் வாடிகள் மற்றும் வீடுகள் நாளுக்கு நாள் கடலரிப்பு காரணமாக அழிந்து வருவதாகவும்.அத்துடன் இயந்திரப் படகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைக்க முடியவில்லை எனவும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே இந்த கடலரிப்பை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்