பிரதமருடன் இருக்கும் கித்சிறி ராஜபக்ஸ யார்?

பிரதமருடன் இருக்கும் கித்சிறி ராஜபக்ஸ யார்?

பிரதமருடன் இருக்கும் கித்சிறி ராஜபக்ஸ யார்?

எழுத்தாளர் Bella Dalima

24 Apr, 2018 | 10:21 pm

Colombo (News 1st)

மருதானை – சுதுவெல்ல பகுதியில் நடைபெற்ற புதுவருட நிகழ்வொன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டிருந்தார்.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஸ இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததுடன், அவர் பிரதமருக்கு அருகிலிருந்து பரிசுகளை பரிமாறிக்கொள்ளும் புகைப்படங்களை பத்திரிகைகள் இன்று வௌியிட்டிருந்தன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றிபெற்ற கடந்த 4 ஆம் திகதி இரவு, கொழும்பு – கங்காராம விகாரைக்கு சென்ற சந்தர்ப்பத்திலும் கித்சிறி ராஜபக்ஸ பிரதமருக்கு அருகில் இருந்தார்.

அதற்கு அடுத்த தினத்தில், பிரதமருக்கு வாழ்த்துத் தெரிவித்து கொழும்பு நகரெங்கும், கித்சிறி ராஜபக்ஸ சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார்.

மாநகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஸ பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் ஒருமுறை கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்