by Staff Writer 23-04-2018 | 10:33 PM
COLOMBO (News 1st) தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் முதல் நாளான இன்று வடக்கின் நட்சத்திரமான அனிதா ஜெகதீஸ்வரன் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் மீண்டும் தேசிய சாதனையை புதுப்பித்தார்.
இன்று அவர் தனது சாதனையை 3.55 மீற்றராக உயர்த்திக் கொண்டார்.
தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் நவீனமயப்படுத்தப்பட்ட சுகததாச விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமானது.
இன்று முற்பகல் நடைபெற்ற மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் அனித்தா ஜெகதீஸ்ரன் 3.55 மீற்றர் தூரத்திற்கு திறமையை வெளிப்படுத்தி , இலங்கை சாதனையை புதுப்பித்தார்.
கடந்த வருடப் போட்டியில் அவர் 3.48 மீற்றர் தூரத்திற்கு ஆற்றலை வெளிப்படுத்தி தேசிய சாதனையை படைத்திருந்தார்.
போட்டியில் கே.எல்.எஸ் பெரேரா இரண்டாமிடத்தை பெற்றுக் கொள்ள ,3 மீற்றர் தூரத்திற்கு திறமையை வெளிப்படுத்திய கிளிநொச்சி பளை மத்தியக் கல்லூரியின் கே.சுகிர்தா மூன்றாமிடத்தைப் பிடித்தார்.
https://www.youtube.com/watch?v=Gte8Ee-Wr7g