யேமனில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 20 இற்கும் அதிகமானோர் பலி

யேமனில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 20 இற்கும் அதிகமானோர் பலி

யேமனில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 20 இற்கும் அதிகமானோர் பலி

எழுத்தாளர் Staff Writer

23 Apr, 2018 | 4:30 pm

சவுதி தலைமையிலான இராணுவ கூட்டணி யேமனில் நடத்திய வான் தாக்குதலில் 20 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

யேமனின் வடமேற்கு பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும் 40 சடலங்கள் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பிராந்திய வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலில் சிக்கிய 30 சிறுவர்கள் உள்ளிட்ட 46 பேர் காயமடைந்துள்ளனர்.

பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவில்லையெனவும், இது தொடர்பான விசாரணைகளுக்காக குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் சவுதி தலைமையிலான இராணுவ கூட்டணி தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்