பெரும்போகத்தில் செய்கை பாதிக்கப்பட்ட 600 விவசாயிகளுக்கு இழப்பீடு

பெரும்போகத்தில் செய்கை பாதிக்கப்பட்ட 600 விவசாயிகளுக்கு இழப்பீடு

பெரும்போகத்தில் செய்கை பாதிக்கப்பட்ட 600 விவசாயிகளுக்கு இழப்பீடு

எழுத்தாளர் Staff Writer

23 Apr, 2018 | 5:27 pm

COLOMBO (News 1st) பெரும்போகத்தில் செய்கை பாதிக்கப்பட்ட 600 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது.

விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க தலைமையில் இதற்கான நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது, செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 40,000 ரூபா வரை இழப்பீடு வழங்கப்படுவதாக விவசாய காப்புறுதி சபை தலைவர் சிட்னி கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

2018 வரவு செலவுத்திட்டத்தின் பிரகாரம் செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகள், காப்புறுதி சபையின் மூலம் இழப்பீடு பெற்றுக் கொள்வது கட்டாயமாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்