ஜனாதிபதி நாட்டை வந்தடைந்தார்

ஜனாதிபதி நாட்டை வந்தடைந்தார்

ஜனாதிபதி நாட்டை வந்தடைந்தார்

எழுத்தாளர் Staff Writer

23 Apr, 2018 | 2:04 pm

COLOMBO (News 1st) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியாவிற்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் நாட்டை வந்தடைந்தார்.

25 ஆவது பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு சென்றிருந்தார்.

இந்த மாநாடு கடந்த 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற்றது.

மாநாட்டிற்கு இணையாக நடைபெற்ற மாநாடுகளிலும் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்