அத்தனகல்ல துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது

அத்தனகல்ல துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது

அத்தனகல்ல துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Staff Writer

23 Apr, 2018 | 2:15 pm

COLOMBO (News 1st) அத்தனகல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டின் பிரதான சூத்திரதாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 42 வயதான சந்தேகநபர் அத்தனகல்ல பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன் தினம் இரவு அத்தனகல்ல பகுதியில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியின் போது அடையாளந் தெரியாதோரால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது 37 வயதான வர்த்தகர் உயிரிழந்ததுடன், கர்ப்பிணிப் பெண்ணொருவர் உட்பட நால்வர் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக, இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்