காபூல் தற்கொலை தாக்குதலில் 31 பேர் பலி

காபூலில் வாக்காளர் பதிவு நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 31 பேர் பலி

by Staff Writer 22-04-2018 | 3:10 PM
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வாக்காளர் பதிவு நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். வாக்காளர் பதிவு நிலையத்துக்கு வௌியில் காத்திருந்த மேலும் 50 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தலிபான் தீவிரவாத அமைப்பு தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லையென தெரிவித்துள்ளதுடன் தாக்குதலுக்கு எந்த தரப்பினரும் உரிமை கோரவில்லை. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள தேர்தலுக்காக வாக்காளர் பதிவுகள் இந்த மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.