சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாதுரை கஜமுகன் தந்தை செல்வா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாதுரை கஜமுகன் தந்தை செல்வா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாதுரை கஜமுகன் தந்தை செல்வா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

எழுத்தாளர் Staff Writer

22 Apr, 2018 | 8:46 pm

COLOMBO (News 1st) 2018 ஆம் ஆண்டிற்கான தந்தை செல்வா நினைவு தின நிகழ்வு கொழும்பில் இன்று நடைபெற்றது.

தந்தை செல்வா நற்பணி மன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு கொழும்பு விவேகானந்த சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது பல்வேறு துறைகளில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தந்தை செல்வா விருது வழங்கப்பட்டது.

ஊடகத்துறை சார்பில் சக்தி ரி.வியின் நிகழ்ச்சிப் பிரிவு முகாமையாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாதுரை கஜமுகன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த விருதிற்கு மேலும் 3 ஊடகவியலாளர்களுக்கும் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்வி, பொதுச் சேவை, ஆன்மீகம் உள்ளிட்ட துறைகளில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் தந்தை செல்வா விருதுகள் வழங்கப்பட்டன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்