ஒன்லைனில் பரீட்சைகளை நடத்த நடவடிக்கை

ஒன்லைனில் பரீட்சைகளை நடத்த நடவடிக்கை

by Bella Dalima 21-04-2018 | 4:28 PM
Colombo (News 1st) பரீட்சைகள் மற்றும் வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை ஒன்லைன் ஊடாக முன்னெடுப்பது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. இதன் பொருட்டு பரீட்சைகள் திணைக்களம் மற்றும் தேசிய கல்வி நிறுவனத்தின் அதிகாரிகள் சிலருக்கு வௌிநாட்டில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கு இணையாக பரீட்சை நடைமுறைகளிலும் சில மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும், அதற்காக புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கும் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், ஒன்லைன் ஊடாக பரீட்சைகளை நடத்துவதற்காக மலேசியாவின் PUTRA பல்கலைக்கழகத்தில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்த பயிற்சிகளில் பங்கேற்க பரீட்சைகள் திணைக்களத்தின் 12 பேரையும், தேசிய கல்வி நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவரையும் கொண்ட குழு நாளை (22) மலேசியாவிற்கு பயணிக்கவுள்ளது.