ஐஸ்வர்யாராய் - அபிஷேக் பச்சன் இடையே தகராறு?

ஐஸ்வர்யாராய் - அபிஷேக் பச்சன் இடையே தகராறு?

by Bella Dalima 21-04-2018 | 7:23 PM
ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வீட்டிலேயே தனித்தனியாக வசிப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி பட உலகின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை 2007 இல் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரத்யா என்ற பெண் குழந்தை உள்ளது. ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் சமீப காலமாக நல்ல புரிதல் இல்லை என்று தகவல்கள் பரவி வருகின்றன. மற்ற கதாநாயகர்களுடன் அவர் நெருக்கமாக நடிப்பது அபிஷேக் பச்சனுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. அபிஷேக் பச்சனின் தாயும், பழம்பெரும் நடிகையுமான ஜெயா பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் அடிக்கடி தகராறுகள் நடப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. மாமியாருடன் சண்டையால் ஐஸ்வர்யா ராய் அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு சென்று அதிக நாட்கள் அங்கு தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை இருவருமே மறுக்கவில்லை. ஜெயா பச்சனின் 70 ஆவது பிறந்த நாளை குடும்பத்தினர் விருந்து வைத்து விமரிசையாகக் கொண்டாடினார்கள். அதில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக கிசுகிசுத்தனர். அபிஷேக் பச்சனின் சகோதரி ஸ்வேதா நந்தாவுடனும் மோதல் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், கணவர் அபிஷேக் பச்சனை சந்தேகித்து அவரது செல்போனில் தகவல்களை ஐஸ்வர்யா ராய் ஆய்வு செய்ததாகவும், இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வீட்டிலேயே தனித்தனியாக வசிப்பதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை என ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் தான் இருவரும் ஒரே வீட்டிலேயே தனித்தனியாக வசிப்பதாக வீடியோ தகவல் வெளிவந்துள்ளது.