மகியங்கனையில் தாயும் மகளும் கொலை

மகியங்கனையில் தாயும் மகளும் கொலை

மகியங்கனையில் தாயும் மகளும் கொலை

எழுத்தாளர் Bella Dalima

21 Apr, 2018 | 4:15 pm

Colombo (News 1st)

மகியங்கனை – மாபாகடவெவ பகுதியில் தாயும் மகளும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

59 வயதான தாயும் 40 வயதான மகளுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (20) இரவு இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிரேதப் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்வற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, தெல்தெனிய கும்புக்கந்துர பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் 35 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்