பிரெட்பி: முதற்கட்டத்தில் ரோயல் கல்லூரி அபாரவெற்றி

பிரெட்பி கேடயத்திற்கான முதற்கட்டத்தில் கொழும்பு ரோயல் கல்லூரி அபார வெற்றி

by Bella Dalima 21-04-2018 | 6:27 PM
Colombo (News 1st) கண்டி திரித்துவக் கல்லூரி அணிக்கு எதிரான 74 ஆவது வருடாந்த பிரெட்பி கேடயத்திற்கான போட்டியின் முதற்கட்டத்தில் கொழும்பு ரோயல் கல்லூரி அபார வெற்றியீட்டியது. இலங்கை பாடசாலைகள் வரலாற்றில் அதிபிரசித்தி பெற்ற ரக்பி போட்டியாக பிரெட்பி கேடய ரக்பி தொடர் காணப்படுகின்றது. கொழும்பு ரோயல் ரக்பி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 19-0 என்ற புள்ளிகள் கணக்கில் ரோயல் கல்லூரி முதல் பகுதியில் முன்னிலை பெற்றது. இரண்டாம் பகுதியில் கண்டி திரித்துவக் கல்லூரி அணியால் 7 புள்ளிகளுக்கு மேல் பெற முடியாமற்போனது. இரண்டாம் பாதியில் அபாரமாக விளையாடிய ரோயல் கல்லூரி வீரர்கள் 20 புள்ளிகளை சுவீகரித்தனர். இதன்படி, போட்டியில் 39- 7 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்ற ரோயல் கல்லூரி பிரெட்பி கேடயத்தின் முதற்கட்டத்தில் வெற்றியீட்டியது. 6 ட்ரைகள், 3 கோல்கள் மற்றும் ஒரு பெனால்டியின் மூலம் ரோயல் கல்லூரி அணி 39 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. பிரெட்பி கேடயத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 5 ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.