பிரபல இசை, நடனக்கலைஞர் அவிச்சி 28 வயதில் மரணம்

பிரபல இசை, நடனக்கலைஞர் அவிச்சி 28 வயதில் மரணம்

பிரபல இசை, நடனக்கலைஞர் அவிச்சி 28 வயதில் மரணம்

எழுத்தாளர் Bella Dalima

21 Apr, 2018 | 5:31 pm

சுவீடனைச் சேர்ந்த 28 வயதான பிரபல இசை, நடனக்கலைஞர் அவிச்சி (Avicii) ஓமானின் மஸ்கட்டில் மரணமடைந்துள்ளார்.

அவரது இறப்பு குறித்து எந்த வித தகவலும் வெளியாகாத நிலையில், அவிச்சியின் பிரதிநிதி ஒருவர் அவரது மரணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்

டிம் பெர்ஜ்லிங் என்னும் அவிச்சியின் மரணம் நம் அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு இது மிகப்பெரிய இழப்பாகும்

என கூறியுள்ளார்.

பித்தப்பை கோளாறு மற்றும் குடல்வால் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவிச்சி, கடந்த 2016 ஆம் ஆண்டு தான் உலக சுற்றுலா மேற்கொள்வதிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார்.

உலகின் தலைசிறந்த Dj-வாகக் கருதப்படும் அவிச்சி Wake Me Up, Levels, Lonely Together with Rita Ora போன்ற பல படைப்புகளை இயற்றியுள்ளார்.

இந்நிலையில் அவிச்சியின் இந்த திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்