by Bella Dalima 21-04-2018 | 3:33 PM
அனைத்து ஏவுகணை பரிசோதனைகளையும் இடைநிறுத்துவதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.
அந்நாட்டின் அரச தொலைக்காட்சி ஊடாக அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இன்று முதல் ஏவுகணை பரிசோதனைகள் இடைநிறுத்தப்படவுள்ளதுடன், ஏவுகணைகளை பரீட்சிக்கும் தளங்களும் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரமளவில் தென் கொரிய ஜனாதிபதியுடன் சந்திப்பு இடம்பெறவுள்ள நிலையிலேயே வட கொரியா இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.