மே 19 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல்: கணக்காய்வு நடவடிக்கைகள் பூர்த்தி
by Bella Dalima 20-04-2018 | 9:19 PM
Colombo (News 1st)
இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் எதிர்வரும் மே 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால இன்று அறிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தேர்தலுக்கான கணக்காய்வு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டு, அறிக்கை சொலிசிட்டர் ஜெனரலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவன முகாமையாளரான அசங்க குருசிங்க இலங்கை கிரிக்கெட் பிரதம செயற்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.