பாதாளக்குழு உறுப்பினர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது

பாதாளக்குழு உறுப்பினர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது

பாதாளக்குழு உறுப்பினர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2018 | 4:23 pm

Colombo (News 1st)

கொழும்பு – பாலத்துறை பகுதியில் பாதாளக்குழு உறுப்பினர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

23 வயதான டில்ஷான் மதுவந்த மற்றும் 26 வயதான முனசிங்க ஆரச்சிகே சுசந்த ஆகிய இருவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் பொலிஸ் திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பாதாளக்குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் மற்றுமொரு சந்தேகநபர் கம்பஹா பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 2 வாள்களும் போலி அடையாள அட்டையொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைக்காக குறித்த சந்தேகநபர் மினுவன்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்