சுவாசிலாந்தின் பெயரை மாற்றுகிறார் மன்னர் மஸ்வாதி

சுவாசிலாந்தின் பெயரை மாற்றுகிறார் மன்னர் மஸ்வாதி

சுவாசிலாந்தின் பெயரை மாற்றுகிறார் மன்னர் மஸ்வாதி

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2018 | 4:48 pm

தென்னாப்பிரிக்க நாடான சுவாசிலாந்தின் (Swaziland) பெயரை மாற்ற அந்நாட்டு மன்னர் மஸ்வாதி தீர்மானித்துள்ளார்.

சுவாசிலாந்தின் 50 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

சுவாசிலாந்து 1968 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் திகதி பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது.

இந்நிலையில், சுவாசிலாந்தின் பெயரை Kingdom of eSwatini என மாற்றுவதற்கு மன்னர் தீர்மானித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு முதல் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக மன்னர் மூன்றாம் மஸ்வாதி குறிப்பிட்டுள்ளார்.

சுவாசி மக்களின் நிலம் என்பதே Kingdom of eSwatini என்பதன் பொருள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1.3 மில்லியன் மக்கள் வசிக்கும் சுவாசிலாந்து நாட்டில், அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் களமிறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நபர்களை மன்னரே தெரிவு செய்வார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்