ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்

by Bella Dalima 20-04-2018 | 4:13 PM
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரியும் மத்திய அரசை கண்டித்தும் ஆந்திர முதல்வர் உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார். தமது பிறந்தநாளான இன்றைய தினம் 12 மணி நேர உண்ணாவிரதத்தை மேற்கொள்ளவுள்ளதாக சந்திரபாபு நாயுடு அண்மையில் அறிவித்திருந்தார். இதனடிப்படையில், இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்திரா காந்தி மைதானத்தில் ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்த உண்ணாவிரதத்திற்கு ''நீதிக்கான போராட்டம்'' என பெயரிடப்பட்டுள்ளது. சந்திரபாபுவின் அமைச்சரவையைச் சேர்ந்த 13 பேர் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏனைய அமைச்சர்கள் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்து ஆந்திர மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.