அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தல்

அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தல்

அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தல்

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2018 | 3:17 pm

Colombo (News 1st) 

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைது செய்வதற்கான சிவப்பு அறிவித்தலை சர்வதேச பொலிஸார் விடுத்துள்ளனர்.

அர்ஜுன மகேந்திரனை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம், சர்வதேச பொலிஸாருக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள அர்ஜூன மகேந்திரன், நீதிமன்ற உத்தரவை மீறியமையினால் அவரை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பைக் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அர்ஜூன மகேந்திரனை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரால் விடுக்கப்பட்ட சிவப்பு அறிவித்தல் அனைத்து நாடுகளிலும் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்