அமெரிக்க செனட் சபைக்குள் நுழைந்து சாதனை படைத்த 11 நாள் கைக்குழந்தை

அமெரிக்க செனட் சபைக்குள் நுழைந்து சாதனை படைத்த 11 நாள் கைக்குழந்தை

அமெரிக்க செனட் சபைக்குள் நுழைந்து சாதனை படைத்த 11 நாள் கைக்குழந்தை

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2018 | 5:56 pm

அமெரிக்க பாராளுமன்ற செனட் சபையில் நேற்று (19) இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது, பிறந்து 11 நாட்களேயான கைக்குழந்தை நுழைந்தமை வரலாற்றின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் புதிய தலைவராக ப்ரிடென்ஸ்டைன் என்பவரை அதிபர் ட்ரம்ப் நியமித்தார்.

ஆனால், இதற்கு பாராளுமன்ற செனட் சபையின் ஆதரவு முக்கியம். இதற்காக நேற்று செனட் சபையில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இல்லினாய்ஸ் மாகாண ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினராக டாம்மி டக்வர்த், பிறந்து 11 நாட்களே ஆன தனது கைக்குழந்தையுடன் வாக்கெடுப்பிற்கு வருகை தந்தார்.

வாக்கெடுப்பின் போது உறுப்பினர்கள் தங்களது குழந்தைகளை சபைக்கு அழைத்து வருவது தொடர்பான விதிமுறை கடந்த புதன்கிழமை (18) தான் திருத்தப்பட்டது.

இதன் மூலம், வாக்கெடுப்பின் போது செனட் சபைக்குள் நுழைந்த முதல் குழந்தை என்ற சாதனையை அக்குழந்தை பெற்றுள்ளது.

முன்னாள் இராணுவ வீராங்கனையான டாம்மி டக்வர்த் ஈராக் போரின் போது தனது இரு கால்களையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.

வாக்கெடுப்பின் முடிவில் 50 உறுப்பினர்கள் ஆதரவு, 49 உறுப்பினர்கள் எதிர்ப்பு என்ற நூலிலை வித்தியாசத்தில் ப்ரிடென்ஸ்டைன் நாசா அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்ட சட்டமூலம் வெற்றிகரமாக நிறைவேறியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்