GSP சலுகை ஆடைக் கைத்தொழிலுக்கு வழங்கப்படமாட்டாது

GSP வரிச்சலுகை ஆடைக் கைத்தொழிலுக்கு வழங்கப்படமாட்டாது

by Staff Writer 19-04-2018 | 9:18 AM
COLOMBO (News 1st) மீள அமுல்படுத்தப்படவுள்ள ஜீ.எஸ்.பி வரிச்சலுகை ஆடைக் கைத்தொழிலுக்கு வழங்கப்படமாட்டாது என வர்த்தக திணைக்களம் அறிவித்துள்ளது. இதனை தவிர ஏனைய அனைத்து துறைகளுக்கும் இந்த வரிச்சலகை கிடைக்கும் என வர்த்தக திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் நிமல் கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் மீண்டும் இலங்கைக்கு வழங்குவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அபிவிருத்தியிடைந்துவரும் 120 நாடுகளின் 5000 உற்பத்திகளுக்கு ஏற்றுமதியின் போது இந்த வரிச்சலுகை வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் ஆடை ஏற்றுமதி தொடர்பில் அமெரிக்கா சில விசேட நிபந்தனைகளை பின்பற்றுவதால் அதற்கான வரிச்சலுகை வழங்கப்படாது எனவும் வர்த்தக திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் நிமல் கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரதான ஏற்றுமதி துறையான ஆடை உற்பத்தியின் 70 தொடக்கம் 75 வீதம் அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.