புதிய iPhone ஐ வௌியிடவுள்ள Apple நிறுவனம்

புதிய iPhone ஐ வௌியிடவுள்ள Apple நிறுவனம்

by Bella Dalima 19-04-2018 | 4:51 PM
Apple நிறுவனத்தின் Worldwide Developers மாநாட்டில் அந்நிறுவனம் புதிய iPhone-இனை வெளியிடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Apple நிறுவனம் இந்த ஆண்டில் மாத்திரம் மூன்று iPhone-களை வெளியிடவுள்ளது. அதில் ஒன்று iPhone X - மேம்படுத்தப்பட்ட Model என கூறப்படுகிறது. மூன்று iPhone-களும் பெரிய வடிவமைப்புகள் என்ற வாக்கில், குறைந்த விலையில் மற்றொரு iPhone Model ஐ Apple வெளியிடவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. புதிய விலை குறைந்த iPhone SE ஸ்மார்ட்ஃபோனின் மேம்படுத்தப்பட்ட Model என்றும் கூறப்படுகிறது. அது iPhone SE 2 என அழைக்கப்படவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், புதிய விலை குறைந்த iPhone-இன் தெளிவான தகவல்கள் வெளியாகாமல் உள்ளது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி, Apple விலை குறைந்த iPhone Model ஆனது 2018 ஆம் ஆண்டிற்கான Worldwide Developers Conference-இல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாடு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.