by Staff Writer 19-04-2018 | 11:35 AM
COLOMBO (News 1st) கியூபாவின் துணை ஜனாதிபதி மிகல் டியஸ் (Miguel Diaz) ஜனாதிபதியாக நியமிக்க அந்நாட்டு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக பாராளுமன்றத்தில் தேசிய சபை வாக்களித்துள்ளதுடன் இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கியூபாவின் தற்போதைய ஜனாதிபதி ராஹுல் கெஸ்ட்ரோ இன்றைய தினம், முறைப்படி அதிகாரத்தை மிகுவல் டிகெஸிடம் வழங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்தமையின் மூலம் மிகலுக்கு ஒரு நீண்ட கால அரசியல் அனுபவம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.