மலையாளப் பக்கம் ஒதுங்கும் நயன்தாரா: காரணம் இதுவா?

மலையாளப் பக்கம் ஒதுங்கும் நயன்தாரா: காரணம் இதுவா?

மலையாளப் பக்கம் ஒதுங்கும் நயன்தாரா: காரணம் இதுவா?

எழுத்தாளர் Bella Dalima

19 Apr, 2018 | 5:40 pm

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா மற்றுமொரு மலையாளப் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தென்னிந்திய மொழிகளில் மலையாளப் பட உலகம் தான் மூத்த நடிகைகளுக்கு சொர்க்கம்.

திருமணத்திற்கு பின் 40 வயதுகளில் கூட கதாநாயகிகள் வேடங்கள் கிடைக்கின்றன. அவர்களுக்கான கதைகளையும் வலுவாக உருவாக்குகிறார்கள்.

மற்ற மொழிகளில் திருமணமான நடிகைகளை அக்கா, அண்ணி வேடங்களுக்கு முத்திரை குத்திவிடுவார்கள்.

தமிழ், தெலுங்கு அளவிற்கு மலையாளத்தில் சம்பளம் கிடைக்காது. ஆனாலும், கதாநாயகிகள் தனித்து திறமையை வெளிப்படுத்த முடியும்.

தமிழில் 6 படங்கள் கைவசம் வைத்து நம்பர்-1 நடிகையாகத் திகழும் நயன்தாரா, அடுத்தடுத்து மலையாளத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக லவ் ஆக்‌ஷன் டிராமா என்ற படத்தில் நடிக்கிறார்.

அடுத்து ‘கோட்டயம் குர்பானா’ என்ற மலையாளப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து மலையாள மார்க்கெட்டைப் பிடிக்க அவர் திட்டமிடுவதாகத் தெரிகிறது.

விரைவில் திருமண பந்தத்தில் இணைய இருப்பதால், திருமணத்திற்குப் பிறகும் கதாநாயகியாகவே நீடிக்க மலையாள படங்கள் பக்கம் கவனம் நயன்தாரா கவனம் செலுத்துவதாகக் கூறுகிறார்கள்.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இரண்டு ஆண்டுகளாகக் காதலிப்பதும் இருவருமே அதை உறுதிப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்