பொதுநலவாய விளையாட்டில் 6 பதக்கங்களை வென்ற இலங்கை அணிக்கு பாராட்டு விழா 

பொதுநலவாய விளையாட்டில் 6 பதக்கங்களை வென்ற இலங்கை அணிக்கு பாராட்டு விழா 

பொதுநலவாய விளையாட்டில் 6 பதக்கங்களை வென்ற இலங்கை அணிக்கு பாராட்டு விழா 

எழுத்தாளர் Bella Dalima

19 Apr, 2018 | 9:34 pm

Colombo (News 1st) 

21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகளை வாழ்த்துவதற்காக இன்று விசேட வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது.

விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான தயாசிறி ஜயசேகரவும் கலந்துகொண்டார்.

அவுஸ்திரேலியாவின்​ Gold Coast நகரில் நடைபெற்ற 21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை ஒரு வெள்ளி, 5 வெண்கலம் அடங்கலாக 6 பதக்கங்களுடன் 31ஆம் இடத்தைப்பெற்றது.

இது பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கையின் அதிசிறந்த பெறுபேறாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்