புதிய iPhone ஐ வௌியிடவுள்ள Apple நிறுவனம்

புதிய iPhone ஐ வௌியிடவுள்ள Apple நிறுவனம்

புதிய iPhone ஐ வௌியிடவுள்ள Apple நிறுவனம்

எழுத்தாளர் Bella Dalima

19 Apr, 2018 | 4:51 pm

Apple நிறுவனத்தின் Worldwide Developers மாநாட்டில் அந்நிறுவனம் புதிய iPhone-இனை வெளியிடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Apple நிறுவனம் இந்த ஆண்டில் மாத்திரம் மூன்று iPhone-களை வெளியிடவுள்ளது. அதில் ஒன்று iPhone X – மேம்படுத்தப்பட்ட Model என கூறப்படுகிறது.

மூன்று iPhone-களும் பெரிய வடிவமைப்புகள் என்ற வாக்கில், குறைந்த விலையில் மற்றொரு iPhone Model ஐ Apple வெளியிடவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

புதிய விலை குறைந்த iPhone SE ஸ்மார்ட்ஃபோனின் மேம்படுத்தப்பட்ட Model என்றும் கூறப்படுகிறது.

அது iPhone SE 2 என அழைக்கப்படவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், புதிய விலை குறைந்த iPhone-இன் தெளிவான தகவல்கள் வெளியாகாமல் உள்ளது.

தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி, Apple விலை குறைந்த iPhone Model ஆனது 2018 ஆம் ஆண்டிற்கான Worldwide Developers Conference-இல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாடு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்