பண்டிகைக் கால ரயில் சேவை மூலம் 65 இலட்சத்திற்கும் அதிக இலாபம்

பண்டிகைக் கால ரயில் சேவை மூலம் 65 இலட்சத்திற்கும் அதிக இலாபம்

பண்டிகைக் கால ரயில் சேவை மூலம் 65 இலட்சத்திற்கும் அதிக இலாபம்

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2018 | 12:42 pm

COLOMBO (News 1st) பண்டிகைக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ரயில் சேவை மூலம் 65 இலட்சத்திற்கும் அதிக இலாபம் ஈட்டப்பட்டுள்ளது.

இம்மாதம் ஏழாம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையான காலப்பதியில் இந்த இலாபம் பெறப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி வணிக அத்தியட்சகர் என்.ஜே.இத்திபொலகே குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து ரயில் நிலையங்களிலும் இரண்டு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் வரை வருமானம் அதிகரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பயணிகளின் கோரிக்கைக்கு அமைய நாளை முதல் மீண்டும் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் என்.ஜே.இத்திபொலகே தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பண்டினை காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஆறு கோடி ரூபாவிற்கும் அதிக இலாபத்தை ஈட்டியுள்ளது.

பயணிகளின் நலன் கருதி தொடர்ந்தும் ஆயிரத்து 500 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவின் பிரதம அத்தியட்சகர் சரத் வல்கம்பாய தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்