சமூக வலைத்தளத்தில் விமர்சித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த டாப்சி

சமூக வலைத்தளத்தில் விமர்சித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த டாப்சி

சமூக வலைத்தளத்தில் விமர்சித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த டாப்சி

எழுத்தாளர் Bella Dalima

19 Apr, 2018 | 5:17 pm

தமிழில் ஆடுகளம், ஆரம்பம் படங்கள் மூலம் பிரபலமான டாப்சி தெலுங்கு, இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

அண்மையில் அவருடைய புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த படத்தை பார்த்த ரசிகர் ஒருவர்,

நீ சராசரியான பொண்ணுதான். உன்னையெல்லாம் கதாநாயகியாக்கியது யார்?

என்று கேள்வி எழுப்பி கருத்து வெளியிட்டிருந்தார்.

இது டாப்சிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

கொஞ்சமாவது நடிப்பதால் தான் என்னை கதாநாயகி ஆக்கிவிட்டார்கள். நான் சராசரியான பெண்ணாக இருப்பதில் பிரச்சினை இல்லையே. இந்த உலகத்தில் நீங்கள் சொன்ன மாதிரியான சராசரி பெண்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்

என்று சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்தார்.

இதனால் விமர்சனக்கருத்தை அந்த ரசிகர் சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கிவிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்